ராஜன் ரவிச்சந்திரன் 
Regional02

மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரனுக்கு : 2021-ம் ஆண்டுக்கான சேவை சிறப்பு விருது :

செய்திப்பிரிவு

இதுகுறித்து சேபியன்ஸ் சுகாதார அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் சென்னை, மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவன (மியாட்) சர்வதேச சிறுநீரகவியல் இயக்குநராகவும், சென்னை ஐஐடி துணைப் பேராசிரியராகவும் உள்ளார். இவர் தனது 30 ஆண்டுகால சேவையில், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இவர் தனது நீண்டகால பணியின்போது பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். பல மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழக குழுக்களுக்கு தலைமை தாங்கியுள்ளார். சிறுநீரக நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றி விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார்.

மேலும் 1997-ம் ஆண்டில் சேபியன்ஸ் சுகாதார அறக்கட்டளையை தொடங்கி சிறுநீரக நோயாளிகளுக்கு உதவி வருகிறார். 2012-ல் தொடங்கப்பட்ட சிஸ்டினோசிஸ் அறக்கட்டளையின் நிறுவன தலைவராக உள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT