விழுப்புரம் சாலாமேடு ஈபிகாலனியில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை கட்டிடத்தை அமைச்சர் பொன்முடி திறந்துவைத்தார். 
Regional01

ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் - குறித்த நேரத்திற்குள் சரியான அளவுடன் வழங்கிடுக : அமைச்சர் பொன்முடி அறிவுரை

செய்திப்பிரிவு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேடு ஈபி காலனி மற்றும் ராகவன் பேட்டை திருநகர் பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் சார்பில் மகளிர் பகுதி நேர நியாய விலைக் கடை கட்டிடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியது:

சாலாமேடு ஈபி காலனி மற்றும் ராகவன் பேட்டை திருநகர் பகுதிக ளில் மாநிலங்களவை உறுப்பினர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடை கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்தி டும் நியாய விலைக்கடைகள் பொறுப்புடனும், நியாயமாகவும் நடைபெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.நியாயவிலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட் கள் குறித்த நேரத்திற்குள் சரியான அளவுடன் வழங்கிட வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து விழுப்புரம்,வானூரில் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில் 3,150 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் வானூரில் பல்வேறு துறைகளின் சார்பில் 2,047 பயனாளிகளுக்கு ரூ30.38 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியர் மோகன், எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பிரபாகரன், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, கோட்டாட்சியர்அரிதாஸ், துணை பதிவாளர் நளினா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT