கீழ் வளையமாதேவி பகுதியில்குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்அமைப்பதற்கு தேர்வு செய் யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெய்வேலி என்எல்சி நிறுவ னத்தின் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரில் இருந்து குறிஞ்சிப்பாடி, வடலூர், கெங்கைகொண்டான், திட்டக்குடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட 6 பேரூராட்சிகளும், விருத்தாசலம், நல்லூர், மங்க ளூர் ஒன்றிய பகுதிகளில் 625 ஊராட்சிகள் பயன் பெறும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ. 479கோடியில் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணியில் வடலூர் சத்திய ஞானசபை அருகில் குடிநீர் சேமிப்பு தொட்டி கட்டும் பணியை நேற்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது சத்திய ஞானசபை செயல் அலுவலர் ராஜா சரவணகுமார் ஏற்கெனவே சபைக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. தற்போது கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குடிநீர் சேமிப்பு தொட்டியும் கட்டப்படுகிறது. இதற்கு உரிய அனுமதியையும், வாடகையையும் பேரூராட்சி நிர்வாகம் தரவில்லை என்றார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் , வடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளையிடம் பிரச்சினை வராமல் வாடகை செலுத்தி சரி செய்து கொள்ளுங்கள் என்றார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் கீழ்வளையமாதேவி பகுதியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனிவேல், நிர்வாக பொறியாளர் சந்திரமோகன், வடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.