Regional01

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை பல் வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று அதிகாலையில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மேலும் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்றையமழையளவு: காட்டுமன்னார் கோவிலில் 54.3மிமீ, லால்பேட்டையில் 26 மிமீ, பரங்கிப் பேட்டையில் 22 மிமீ, கொத்தவாச்சேரியில் 21 மிமீ, புவனகிரி 14 மிமீ, தொழுதூரில் 11 மிமீ, அண்ணாமலைநகரில் 10.4 மிமீ, பெலாந்துறையில் 9 மிமீ, கடலூரில் 8.2 மிமீ, சிதம்பரத்தில் 7.4 மிமீ, வேப்பூரில் 6 மிமீ, முஷ்ணத்தில் 3.3 மிமீ மழை பெய்தது.

SCROLL FOR NEXT