Regional01

உசிலம்பட்டி அருகே : கார் மோதி : ஒருவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வடுகபட்டியைச் சேர்ந்த வர் பெருமாள் (50). இவர் வேலை நிமித்தமாக, உசிலை சென்றுவிட்டு மீண்டும் தனது ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.

உசிலம்பட்டி அருகே பொட்லுப்பட்டி அருகே சென்றபோது, திருப்பம் ஒன் றில் இவரது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்தி லேயே பெருமாள் இறந்தார்.

காரில் பயணித்த தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த தாமோதரன் (43), அமுதா (38) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.

SCROLL FOR NEXT