சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக கூறி, வாயில் கருப்பு துணி கட்டி பாளையங்கோட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional02

தூத்துக்குடியில் பாஜகவினர் வாயைக் கட்டி ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவதாக தமிழக அரசை கண்டித்தும், யூடியூபர் மாரிதாஸ் கைதை கண்டித்தும் தூத்துக்குடியில் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் பாளையங்கோட்டை சாலையில் மார்க்கெட் சந்திப்பு அருகேயுள்ள பாஜக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் பி.எம்.பால்ராஜ் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வாயில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு. கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்டச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், மான்சிங், மாவட்ட பொதுச்செயலாளர் வி.எஸ்.ஆர். பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT