அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள திருநெல்வேலி, விருதுநகர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், ஈரோடு மாநகர்,ஈரோடு புறநகர் கிழக்கு, புறநகர்மேற்கு, நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, மத்தி, வடக்கு,தெற்கு, செங்கல்பட்டு கிழக்கு,மேற்கு ஆகிய 20 மாவட்டங்களில் டிச.13, 14-ல் அதிமுக அமைப்பு தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கு மாவட்ட தேர்தல்பொறுப்பாளர்கள், ஒன்றியம், பேரூராட்சி, நகரம், மாநகராட்சிபகுதிகளுக்கான தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.