CalendarPg

தமிழகத்தில் நடந்த 14-ம் கட்ட முகாமில் - 20.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி :

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 14-வது கட்ட மெகா முகாமில் 20 லட்சத்து 45 ஆயிரத்து 347 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் வாரந்தோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 13 முகாம்கள் நடைபெற்றுள்ளன. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது.

50 ஆயிரம் இடங்கள்

சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

14-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் மொத்தம் 20 லட்சத்து 45 ஆயிரத்து 347 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று(ஞாயிறு) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், தடுப்பூசி மையங்கள் இன்று செயல்படாது என்று சுகாதாரத் துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT