திருத்தணியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிகழ்ச்சியை முன்னிட்டு, விழா ஏற்பாடுகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ். 
Regional02

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு - ரூ.3,000 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : திருத்தணியில் டிச.14-ம் தேதி முதல்வர் வழங்குகிறார்

செய்திப்பிரிவு

திருத்தணியில் வரும் 14-ம் தேதி நடைபெறும் விழாவில், ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முதல்வர் வழங்குகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

திருத்தணி, பட்டபிராமபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு, அங்குநடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர், அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நடப்பாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மேம்பாடு, வளர்ச்சிக்காக சுழல் நிதி, அரசு உதவி நிதி மற்றும் வங்கிகளில் தரக்கூடிய நிதிகள் மூலமாக ரூ.20,000 கோடி அளவில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், ரூ.3,000 கோடி மதிப்பிலான உதவிகளை, திருத்தணியில் நடைபெறும் விழாவில் முதல்வர் வழங்க உள்ளார்” என்றார்.

இந்த ஆய்வின்போது, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், எஸ்பி வருண்குமார், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT