திண்டிவனத்தில் நேற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திண்டிவனம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்ப மனுக்கள் மற்றும் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் மோகன், விழுப்புரம் எம்பி .ரவிக்குமார், மயிலம் எம் எல் ஏ சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் மஸ்தான் பெற்றார். அப்போது அவர் பேசியது:
முதல்வரின் பல்வேறு முன்னேச் சரிக்கை நடவடிக்கைகளால் கரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்து பொதுமக்கள் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தி தந்துள்ளார். ‘இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு கல்வியும், சுகாதாரத்துறை சார்பில் வீடுகளுக்கே சென்று மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது" என்றார். இதை தொடர்ந்து கரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் 90 நபர்களுக்கு மற்றும் 150 பயனா ளிகளுக்கு ரூ.49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ஷீலா தேவி சேரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் பொற்கொடி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, திண்டிவனம் வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் 90 நபர்களுக்கு வழங்கினார்.