புதுச்சேரியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட் டிகள் நடத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘புதுச்சேரி கிரிக் கெட் சங்கத்தை சியாச்சின் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்நிறுவனம் நீர் நிலைகளை யும், அரசு புறம்போக்கு நிலத் தையும் ஆக்கிரமித்து அதில் கிரிக்கெட் ஸ்டேடியத்தை கட்டி யுள்ளது.
அரசு புறம்போக்கு நிலம்மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது குறித்து கிராம மக்களும் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் ஆய்வு நடத்திய புதுச்சேரி நகரமைப்புத் துறை செயலரும், அந்த ஸ்டேடியம் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகக்கூறி அதற் கான மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கவும், அத்துமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கவும் பரிந் துரை செய்துள்ளார்.
அதன்படி அந்த இடத்தில் இருந்து வெளியேற சியாச்சின் நிறுவனத்துக்கு கடந்த நவம்பரில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்த இதுவரையிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ராஜா, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மத் திய அரசு மற்றும் புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத் துள்ளனர்.
அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.