கடலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். ஜவஹர் தலைமையில் நடந்தது. 
Regional02

கடலூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் - 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு :

செய்திப்பிரிவு

தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம்,விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார் கோவில் ஆகிய நீதிமன்றங்களில் நடந்தது.

இதில் கடலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். ஜவஹர் தலைமையில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் உட்பட சுமார் 6,897 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 3,053 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.20,38,06,512 வழங்க உத்தரவிடப்பட்டது.

புதுச்சேரியில்

1,208 வழக்குகளுக்கு தீர்வு

SCROLL FOR NEXT