Regional01

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ஆசிரியர் பணி :

செய்திப்பிரிவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கு தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அடிப்படையில் அரசு பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறது. இதற்காக பல்வேறு கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் செயல்பட உள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள சைவ அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கு தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தலைமை ஆசிரியருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.35 ஆயிரம், ஆகம ஆசிரியருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என கோயில் தக்கார் மற்றும் இணை ஆணையர் அறிவித்துள்ளனர்.

வயது, கல்வி தகுதி உள்ளிட்ட விபரங்களை அறியவும், விண்ணப்பங்களை அனுப்பவும் www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம்.

SCROLL FOR NEXT