Regional01

கண்மாயில் மூழ்கி பொறியியல் மாணவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கண்மாயில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோவில்பட்டி யைச் சேர்ந்தவர் அமலன்(18). இவர், பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர் நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த 3 நண்பர்களுடன் சேர்ந்து திருவாதவூர் அருகே உள்ள பெரிய கண்மாயில் குளிக்கச் சென்றார்.

அப்போது திடீரென்று நீரில் மூழ்கிய அமலன், அப்பாஸ் ஆகியோரை கண்டுபிடிக்க முடியவில்லை. உடன் வந்த வர்கள் அவர்களைத் தேடினர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினரும் தேடினர். இதில் அமலன் சடலமாக மீட்கப்பட்டார்.

அப்பாஸ் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். மேலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT