Regional02

துகிலி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் கோபுர கலசம் திருட்டு :

செய்திப்பிரிவு

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே துகிலியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது, மூலவர் கோபுரக் கலசத்துக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ஒன்றரை அடி உயரமுள்ள செப்புக் கலசம் பொருத்தப்பட்டது. இந்த செப்புக் கலசம் நேற்று காலை திருடு போயிருந்ததைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த கோயில் தக்காரும், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயில் செயல் அலுவலருமான கிருஷ்ணகுமார், திருப்பனந்தாள் சரக இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் அருணா மற்றும் அலுவலர்கள் கோயிலுக்குச் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், பந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT