Regional02

இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

சாத்தான்குளம் டிஎன்டிடிஏ தூய ஸ்தேவான் தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்விதிட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தாளாளர் மற்றும் சேகர குருவான செல்வன் மகாராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை வேதராணி வரவேற்றார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் விஜயன், இல்லம் தேடி கல்வியின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

தூத்துக்குடி மக்கள் எழுச்சி கலைக்குழு தலைவர் காசிராஜன் தலைமையிலான குழுவினர் கரோனா தொற்றால் மாணவர்கள் இழந்த கல்வியை மீட்டெடுக்கவும், கல்வியின் ஊக்கம் குறித்தும் பாடல்கள், நடனங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கேள்விகளுக்கு சரியாக பதி லளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT