Regional02

ஒமைக்ரான் வைரஸ் பரவல் - பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயார் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

செய்திப்பிரிவு

ஒமைக்ரான் வைரஸ் பரவும் நிலையில் உலக சுகாதார மையம்,மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்செந்தூர் வந்த அவர் செந்திலாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாதந்தோறும் மருத்துவ வல்லு நர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து முதல்வர் எடுக்கும் முடிவுகளின்படி தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. உலக சுகாதார மையம், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளோம்.

தமிழகத்தில் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் குறித்து மாவட்டம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். அதன் அறிக்கை கிடைத்ததும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT