திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் வரும் 2-ம் தேதி முதல் 2022 மார்ச் 1-ம் தேதி வரை, அலுவலக வேலை நாட்களில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து புதுப்பித்துக் கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்புத் துறையின் https://tnvelaivaaipu.gov.in/ என்ற இணையதள முகவரியிலும், தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0421- 2999152 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.