Regional02

நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி - ‘தெய்வீக காசி ஒளிமயமான காசி’ நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு : பாஜக தேசிய இளைஞரணி துணைத் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

பிரதமரின் கனவு திட்டமான ‘தெய்வீக காசி ஒளிமயமான காசி' என்ற நிகழ்ச்சியை, நாடு முழுவதும் மத்திய அரசு நடத்த இருக்கிறது என்று, பாஜக தேசிய இளைஞரணி துணைத் தலைவர் முருகானந்தம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உதகையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தமிழகத்திலுள்ள மக்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்கள்கூட புனித இடமாக கருதி காசிக்கு வருகின்றனர். வரும் 13-ம் தேதி காசியில் மிக பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் சாதுக்கள், அறிவுசார் வல்லுநர்கள், மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், அமைச்சர்கள்கலந்துகொள்கின்றனர். பாரதத்தின்தனித்துவமான சமூக நல்லெண்ணத்தையும், ஒருமைப்பாட்டையும், கலாச்சாரத்தையும், பிரதிபலிக்கக்கூடிய மிகப்பெரிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியை நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டாட, அனைத்துமக்களும் அறியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

SCROLL FOR NEXT