Regional01

ஈரோட்டில் இன்று 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் இன்று நடைபெறும் சிறப்பு முகாமில் 1.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிபோட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (11-ம் தேதி) 475 மையங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் 1900 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

18 வயதுக்கு மேற் பட்டவர்கள் அச்சமின்றி, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT