மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியருக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டுத் தெரிவித்தனர். 
Regional02

மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகளில் பாரதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி :

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 6 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.

ஈரோடு மாவட்ட அளவிலான 19-வது ஜூனியர் தடகளப் போட்டிகள் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது.

இதில், 16 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் ஆர்.நேகா ஈட்டி எறிதலிலும், எஸ். இலக்கியா தடைதாண்டும் போட்டியிலும், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் எஸ். தருணிகா குண்டு எறிதல் போட்டியிலும், எம். நிஷாபிரியா ஈட்டி எறிதல் போட்டியிலும், எஸ். நவீன்யா தடைதாண்டும் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றனர். மாணவர்கள் பிரிவில் கிஷோர் குண்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தலைவர் பி.வி.செந்தில்குமார், தாளாளர் வி.வி.மோகனாம்பாள் மற்றும் பள்ளி துணை முதல்வர் சந்திரன் ஆகியோர் சான்றிதழ் களையும், பரிசுகளையும் வழங்கி பாராட்டினர்.

பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பி.தட்சணாமூர்த்தி மற்றும் செல்வக்குமார் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப் பட்டது. 

SCROLL FOR NEXT