Regional01

ஓடும் ரயிலில் இருந்து : தவறி விழுந்தவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக்ராஜா (20). இவர் கட்டுமானப் பணிக்காக மதுரையில் இருந்து பெங்களூருக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் - எரியோடு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, தவறி விழுந்ததில் கார்த்திக்ராஜா அதே இடத்தில் உயிரிழந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கிின்றனர்.

SCROLL FOR NEXT