Regional01

சோழவந்தான் அருகே : விவசாயிகள் : சாலை மறியல் :

செய்திப்பிரிவு

சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவித்த அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.

சோழவந்தான் அருகே ஊத்துக்குளியில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயிகள், சோழவந்தான் சாலையில் நெல்லை குவித்து வைத்து டிராக்டர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சோழவந்தான் தென்கரை கூட்டுறவு வங்கிச் செயலாளர் செல்வம் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாமதமின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து விவசாயி கள் மறியலை கைவிட்டனர். இப் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

SCROLL FOR NEXT