ஏந்தல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோருக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. 
Regional01

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு - ஏந்தல் ஊராட்சியில் அஞ்சலி :

செய்திப்பிரிவு

குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது மறைவுக்கு, தி.மலை மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் ராணுவ வீரர்கள், அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன.

தி.மலை அடுத்த ஏந்தல் ஊராட்சி மன்றம் சார்பில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி பக்தவச்சலம் தலைமை வகித்து முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதில், ஒன்றிய குழு உறுப்பினர் பக்தவச்சலம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் லதா மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT