CalendarPg

இடைநின்ற மாணவர்களுக்கு திறன் வளர் பயிற்சி :

செய்திப்பிரிவு

பள்ளி படிப்பில் இருந்து இடைநின்ற மாணவர்களுக்கு திறன் வளர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

10, 11, 12-ம் வகுப்புகளில் இருந்து இடைநின்ற மாணவர்களுக்கு ஏஐசிடிஇ-யின் கர்மா திட்டத்தின்கீழ் திறன் வளர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சிகளை ஏஐசிடிஇயின் கீழ் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் கட்டணச் சேவை அடிப்படையில் வழங்கலாம்.

அதேநேரம் பயிற்சி அளிப்பதற்கான முழுமையான கட்டமைப்புகள் உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், இந்த பயிற்சிகள் அனைத்தும் தேசிய திறன் தகுதி வழிகாட்டுதல் திட்டத்தின் (என்எஸ்க்யூஎப்) விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்பட வேண்டும். விருப்பமுள்ள கல்லூரிகள் டிச.15 முதல் ஏஐசிடிஇ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT