Regional01

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி 2 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த இரு தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அளித்த தகவலின்படி, ஈரோடு வெண்டிபாளையம், துடுப்பதி ஆகிய இரு இடங்களில் செயல்பட்ட தொழிற்சாலைகளில், அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இதில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி நடப்பது உறுதியானதால், இரு ஆலைகளின் மின் இணைப்பைத் துண்டித்தனர்.

SCROLL FOR NEXT