வேலுச்சாமி 
Regional02

என்எல்சியில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர் நகை திருடிய வழக்குகளில் கைது :

செய்திப்பிரிவு

என்எல்சி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக வடலூரில் வசித்து வந்த சேலம் மாவட்டம் மேட்டூர் கவிபுரத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (66), உடந்தையாக இருந்த அவரது 6-வது மனைவி வனிதா (35) ஆகியோரை கடலூர் மாவட்ட டெல்டா போலீஸ் படை சப் - இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

வேலுச்சாமி விருத்தாசலம் பகுதியில் வீடுகளில் மின்சார ரீடிங் குறிப்பது போல் நகைகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 21 பவுன் நகை, ரூ. 2. 65 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT