Regional02

270 சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் டிச.15 வரை விண்ணப்பிக்கலாம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய நலவாழ்வு குழுமத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 180 இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணியிடம் ரூ.14,000 ஒப்பந்த ஊதியத்திலும், 90 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்), சுகாதார ஆய்வாளர் நிலை-II பணியிடம் ரூ.11,000 ஒப்பந்த ஊதியத்திலும் நிரப்பப்பட உள்ளன. இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணியிடத்துக்கு செவிலியர் பட்டப் படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணியிடத்துக்கு இரண்டு வருட பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் கல்வி தகுதியை அங்கீ கரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள், இயக்கு நர், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இரு பணியிடங்களுக்கும் வயது உச்சவரம்பு 50 ஆகும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது.

விண்ணப்பங்களை http://nhm.tn.gov.in என்ற தேசிய நலவாழ்வு குழும வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திலும் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவண நகல்களுடன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் வரும் 15-ம் தேதிக்குள் அளிக்கலாம்.

SCROLL FOR NEXT