திருநெல்வேலியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்டார். 
Regional01

நெல்லை, தென்காசி மாவட்டங்களின் - நகர்ப்புற உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல்களை ஆட்சியர்கள் வெளியிட்டனர். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 7,28,348 வாக்காளர்களும், தென்காசி மாவட்டத்தில் 4,82,031 வாக்காளர்களும் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளி யிட்டார். நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் விஜயலெட்சுமி, மாநகராட்சி உதவி ஆணையர் (நிர்வாகம்) வெங்கட்ராமன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மாஹின் அபுபக்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தோதலுக் காக 1.11.2021 அன்று வெளியிட ப்பட்ட சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடர்புடைய பாகங்கள் ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள் மற்றும் 27 பேரூராட்சிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. பின்னர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 370 வார்டுகளுக்கும், தெரு வாரியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, திருநெல் வேலி மாவட்டத்தில் 7,28,348 வாக் காளர்கள் உள்ளனர். 1.11.2021-ன் படி வாக்காளர்கள் விவரம்:

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகளிலும், 2,03,879 ஆண்கள், 2,12,473 பெண்கள், 37 இதரர் என்று மொத்தம் 4,16,389 வாக்காளர்கள் உள்ளனர். 2 நகராட்சிகளிலுள்ள 42 வார்டுகளில் ஆண்கள் 35,479, பெண்கள் 37,883, இதரர் 2 என்று மொத்தம் 73,364 வாக்காளர்கள் உள்ளனர். 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகளிலும் ஆண்கள் 1,15,984, பெண்கள் 1,22,601, இதரர் 10 என்று மொத்தம் 2,38,595 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமாக மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 370 வார்டுகளில் 3,55,342 ஆண்கள், 3,72,957 பெண்கள், 49 இதரர் என்று மொத்தம் 7,28,348 வாக்காளர்கள் உள்ளனர்.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் உள்ள 33 வார்டுகளில் ஆண்கள் 1,32,951, பெண்கள் 1,37,124 பெண்கள், இதரர் 6 என்று மொத்தம் 2,70,081 வாக்காளர்கள் உள்ளனர். 17 பேரூராட்சிகளில் உள்ள 260 வார்டுகளில் ஆண்கள் 1,04,066, பெண்கள் 1,07,878, இதரர் 6 என்று மொத்தம் 2,11,950 வாக்காளர்கள் உள்ளனர்.

நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தமாக 413 வார்டுகளில் ஆண்கள் 2,37,017, பெண்கள் 2,45,002, இதரர் 12 என்று மொத்தம் 4,82,031 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் நகராட்சிகளில் 300 வாக்குச்சாவடிகள், பேரூராட்சி களில் 294 வாக்குச்சாவடிகள் என்று மொத்தம் 594 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT