Regional01

இளைஞர் கொலை வழக்கில் 5 பேரிடம் விாரணை :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (29). தென்காசி கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கலப்பு திருமணம் செய்துள்ளார். தென்காசியில் தங்கி வேலை தேடி வந்தார். அரவிந்தை கடந்த 3-ம் தேதி முதல் காணவில்லை என்று, தென்காசி காவல் நிலையத்தில், அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இச்சூழ்நிலையில் பாட்டாக் குறிச்சியிலுள்ள கல்கு வாரியில் அரவிந்த் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இக்கொலை தொடர்பாக, கீழப்புலியூரைச் சேர்ந்த சீதாராமன், பொன்னரசு, தம்பிரான், அருணாச்சலம், வேட் டைக்காரன் குளம் மணிகண்டன் ஆகியோரை, தென்காசி காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT