CalendarPg

சென்னை பல்கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்ற பிபின் ராவத் :

செய்திப்பிரிவு

இமாச்சலப் பிரதேச மாநில தலைநகரான சிம்லாவில் செயின்ட் எட்வார்ட் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த பிபின் ராவத், புனேவின் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார். அதன்பிறகு தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

ராணுவத்தில் உயர் பொறுப்புகளில் இருந்தாலும் அவருக்கு படிப்பிலும் எழுத்திலும் தொடர்ந்து தீராத தாகம் இருந்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப் பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ள பிபின் ராவத், சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி பாடத்தில் எம்.ஃபில் பட்டமும் மேலாண்மை, கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் 2 டிப்ளமோ பட்டங்களும் பெற்றுள்ளார். மேலும், ‘ராணுவம்-ஊடக உத்தி ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு 2011-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டமும் பெற்றிருக்கிறார்.

SCROLL FOR NEXT