ராணுவ ஹெலிகாப்டர் விபத்துள்ளான நிலையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். 
FrontPg

பிரதமர் மோடி அவசர ஆலோசனை :

செய்திப்பிரிவு

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக் குள்ளானதில் முப்படைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடி அவசர ஆலோ சனை நடத்தினார்.

தமிழகத்தின் குன்னூரில் நேற்று பிற்பகல் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீக்கிரையானது. இதில் ராவத் உட்பட 13 பேர் உயிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். ராணுவத் தளபதி எம்.எம். நரவனே, ராணுவ உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான தகவல்களை பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு ராணுவ தளபதி நரவனே விளக்கினார். மேலும் விபத்து தொடர்பான காரணத்தைக் கண்டறிவதற்காக ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT