கோவை: ஈரோடு மாவட்ட 19-வது ஜூனியர் தடகள போட்டிகள் கோபி கலை, அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 3,4-ம் தேதிகளில் நடைபெற்றன. அதில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 6 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் ஆர்.நேகா (ஈட்டி எறிதல்), எஸ்.இலக்கியா (தடை தாண்டுதல்) ஆகியோர் தங்கப்பதக்கமும், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் எஸ்.தருணிகா (குண்டு எறிதல்), எம். நிஷாபிரியா (ஈட்டி எறிதல்), எஸ்.நவீன்யா (தடை தாண்டுதல்) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். மாணவர்கள் பிரிவில் ஏ.கிஷோர் குண்டுஎறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை தலைவர் பி.வி.செந்தில்குமார், தாளாளர் வி.வி.மோகனாம்பாள், பள்ளி துணை முதல்வர் சந்திரன் ஆகியோர் சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கி பாராட்டினர். மேலும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பி.தட்சணாமூர்த்தி மற்றும் செல்வக்குமார் ஆகியோரையும் பாராட்டினர்.