Regional01

தனியார் வேலை வாய்ப்பு முகாம் - சிதம்பரத்தில் 106 பேருக்கு பணி நியமன ஆணை :

செய்திப்பிரிவு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் உள்ள ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி இறுதியாண்டு மாணவ,மாணவிகளுக்கு வேலை வாய்ப்புமுகாம் நடைபெற்றது. மருத்துக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர்லாவண்யா குமாரி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் காந்திமதி வரவேற்று பேசினார். மருத்துவபுலமுதல்வர் ரமேஷ் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு இயக்குநரகத்தின் இயக்குநர் முனைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார். இதில் சென்னை  ராமச்சந்திரா மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 106 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பயிற்சி வேலை வாய்ப்பு அலுவலர் முனைவர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT