சிதம்பரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 
Regional01

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி :

செய்திப்பிரிவு

சிதம்பரம் மாலைகட்டித்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

வட்டார கல்வி அலுவலர் ஜான்சன் ஜெயக்குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

வட்டார வளமேற்பார்வையாளர் இளவரசன், ஆசிரியர் பயிற்றுநர்கள் பாஸ்கர், செங்குட்டுவன், நெப்போலியன், காமாட்சி,பூங்குழுலி, ஆசிரியர் கருத்தாளர்கள் ஜெயசீலன், செந்தில், ராஜவேல் ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலத்தில் குழந்தைகளின் கற்றல் குறித்து ஆய்வு செய்தல், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கற்றல், கற்பித்தல், கருவிகள் தயாரித்தல், குழந்தைகளிடம் ஆடல் ,பாடலுடன் கல்வியை கற்பிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை தன்னார்வலர்கள் 59 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

SCROLL FOR NEXT