Regional02

என்எல்சியில் வேலை வாங்கித் தருவதாக மோசடி :

செய்திப்பிரிவு

வடலூர் அருகே உள்ள கல்லுக் குழி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி மோட்சராணி (53). இவர், அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த வேலுசாமி (66) என்பவர் தற்போது இப்பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் அடிக்கடி மோட் சராணியின் கடைக்கு வந்து செல்வது வழக்கம். அப்போது மோட்சராணியின் மகனுக்கு என்எல்சி நிறுவனத்தில் டிரைவர் வேலை வாங்கித் தருவதாக கூறி, கடந்த வருடம் ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து மோட்சராணி நேற்று வடலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் மோசடி வழக்குப்பதிவு செய்து வேலுசாமி (66), அவருக்கு உடந்தையாக இருந்த அவரது இரண்டாவது மனைவி வனிதா (36) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இருவரும் ஏற்கெனவே வடலூரைச் சேர்ந்த மனோகரி, சந்தோஷ்குமார் ஆகியோரிடமும் தலா ரூ. 50 ஆயிரம் வாங்கி கொண்டு, இதே போல் என்எல்சியில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. மேலும் இப்பகுதியில் பலரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT