Regional01

ஆசிய பாரா பேட்மிட்டன் போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் சாதனை : மதுரையில் பயிற்சியாளருக்கு உற்சாக வரவேற்பு

செய்திப்பிரிவு

பஹ்ரைனில் நடந்த ஆசிய பாரா பேட்மிட்டன் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தடகளம், நீச்சல், பளு தூக்குதல், பாரா பேட்மின்டன் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இந்திய பாரா பேட்மின்டன் அணி சார்பில் 13 பேர் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் பங்கேற்று 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் பெற்று புதிய சாதனை படைத்தனர்.

தமிழக பாரா பேட்மின்டன் பயிற்சியாளர் பத்ரி நாராயணன் தலைமையில் இவர்கள் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. மதுரை திரும்பிய பத்ரி நாராயணனுக்கு திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி நிர்வாகம் மற்றும் ஜோதிபாஸ் விளையாட்டு ஆர்வலர்கள் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

SCROLL FOR NEXT