Regional01

மதுரை வேலம்மாள் மருத்துவமனை மருத்துவருக்கு பிரிட்டன் விருது :

செய்திப்பிரிவு

கரோனா பேரிடர் காலத்தில் திறம்படச் செயல்பட்டதற்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர் விஜய் ஆனந்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விருது வழங்கப்பட்டது.

உலகத் தமிழ் நிறுவனமான ஐக்கியப் பேரரசு சார்பில் லண்டன் நாலாவது சர்வதேச மருத்துவ சிறப்பு விருதுகள் வழங்கும் விழா பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஹவுஸ் ஆப் காமன்ஸ் அரங்கில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது.

இதில் மதுரை வேலம்மாள் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் விஜய் ஆனந்துக்கு அவசர சிகிச்சைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும், கரோனா பேரிடர் காலத்தில் திறம்படச் செயல்பட்டதற்காகவும் (கிரிட்டிக்கல் கேர் மெடிக்கல் எக்ஸலன்ஸ் கோவிட் 2020- 21 விருது வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர் விஜய் ஆனந்த் மற்றும் அவரது குழுவினரின் சேவையை வேலம்மாள் மருத்துவமனைத் தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT