Regional01

அல்-அமீன் மேல்நிலை பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு :

செய்திப்பிரிவு

தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து மாநகரப் போலீஸ் காவல் ஆணையர்கள், காவல் கண் காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதை செயல்படுத்தும் விதமாக மதுரை கோ.புதூரில் உள்ள அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் குட்கா, புகையிலை யால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். கோ.புதூர் காவல் சார்பு ஆய்வாளர்கள் பாஸ்கரன், ஜெய்சங்கர் ஆகியோர் மாண வர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங் குகள், பாதிப்புகளை எடுத்து ரைத் தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜாமுகமது, இப் ராகிம், சண்முகசுந்தரம், பாசில் செய்திருந்தனர்.

இதில் ஏராளமான ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT