Regional01

ஈரோட்டில் 150 கிலோ குட்கா பறிமுதல் :

செய்திப்பிரிவு

அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 150 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை ஈரோடு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு கண்ணகி வீதியில் மஹேந்திர குமார் என்பவருக்குச் சொந்தமான கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருப்பதாக நகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், ரூ.3 லட்சம் மதிப்பிலான150 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உரிமையாளர் மஹிந்திர குமார் உட்பட இருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT