Regional01

வெளிமாநில தொழிலாளி கொலை :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகேயுள்ள மல்லூர் சாலையில் தனியார் நிறுவனம் ஒன்று கிரஷர் அமைத்து சாலைகளுக்கு தேவையான தார் கலவை, சிமென்ட் தடுப்புகள் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறது.

இங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் பலரும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பிஹார் மாநிலத்தை சேர்ந்த சுரேந்திரகுமார் ராய்(44) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கிரஷர் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் பின்புறம் உள்ள வயல்பகுதியில், சுரேந்திரகுமார் ராய் இறந்து கிடப்பதாக கீழப்பழுவூர் போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். இதில், சுரேந்திரகுமார் ராய், பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. அருகிலேயே கழுத்தை நெரிக்க பயன்படுத்தப்பட்ட பெல்ட் கிடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலை செய்தது யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT