Regional01

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மண்வெட்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிளைச் செயலாளர் ராஜ.குணசேகரன் தலைமை வகித்தார். கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், ஒன்றியச் செயலாளர் ஆர்.சொர்ணக்குமார், துணைச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அம்புலி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வார வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT