Regional02

உட்கட்சிப் பிரச்சினைகளை திசை திருப்பவே - போராட்டம் அறிவித்துள்ளது அதிமுக : டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகவில் நடைபெறும் நிகழ்வுகள் கேலிக் கூத்தாக உள்ளன. அந்தக் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைகளை திசை திருப்பும் நோக்கில் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக நிச்சயம் போட்டியிடும். மக்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நீட் தேர்வு, 7 பேர் விடுதலை விவகாரம் போன்றவற்றில் தேர்தலுக்கு முன்பு திமுக பேசியதும், ஆட்சிக்கு வந்த பின்பு அக்கட்சியின் நடவடிக்கை என்ன என்பதும் அனைவருக்கும் தெரியும். அதிமுகவை மீட்டு நல்லாட்சி தருவதே எங்கள் இலக்கு. அதை நோக்கி நாங்கள் சென்று கொண்டுள்ளோம் என்றார். அப்போது, கட்சியின் மாநிலப் பொருளாளர் ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT