Regional01

முறைகேடாக மின்வேலி அமைத்த இருவர் கைது :

செய்திப்பிரிவு

காட்பாடி அடுத்த கம்மவான் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ் செல்வன் (38). இவர், சஞ்சீவிராயபுரம் மலையடிவாரம் விவசாய நிலத்தில் நடந்துசென்றபோது, காட்டு விலங்குகளை வேட்டையாட அமைக்கப்பட்டி ருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தார்.

தகவலின் பேரில் காட்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தமிழ்செல்வன் மரணம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முறைகேடாக மின் வேலி அமைத்த நிலத்தின் உரிமையாளர் வேலு மற்றும் அவரது நண்பரான செந்தில் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT