இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் சம்பவங்கள் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நிதிஷ் பிரமானிக் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் 128 ஊடுருவல் முயற்சிகளும், வங்கதேசத்தில் இருந்து 1,787, நேபாளஎல்லையில் 25, மியான்மர் எல்லையில் 133 என்ற அளவில் ஊடுருவல் முயற்சிகள் நடந்துள்ளன. இவற்றை அரசின் மற்ற அமைப்புகள், மாநில அரசுகள் ஆகியவற்றோடு இணைந்து எல்லைப் பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். சீனா, பூடான் எல்லைப் பகுதிகளில் இருந்து கடந்த3 ஆண்டுகளாக இந்தியாவுக்குள் ஊடுருவல் முயற்சிகள் எதுவு மில்லை. இவ்வாறு தெரிவித்தார்.