பள்ளி, கல்லூரிகள் அருகே நடக்கும் கஞ்சா விற்பனையை ஒரு மாதத்தில் ஒழிக்க வேண்டும் எனஅனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு மாதத்துக்குள்...
கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களை மீட்க வேண்டும்
இவ்வாறு சுற்றறிக்கையில் டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.