Regional01

சமையலர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வு ரத்து :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து ஆட்சியர் சு.வினீத் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் 33 சமையலர்கள் (18 ஆண்கள், 15 பெண்கள்) பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. ஆனால், மாநில அளவிலான தேர்வுக்குழுவால், இறுதி செய்யப்படாமல் தேர்வுப் பணிகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்ட பணிநாடுநர்பட்டியல் மற்றும் பொது விளம்பரம் மூலம் பணி நாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்டன.

இதன் காரணமாகவும், நிர்வாக காரணங்களாலும் மேற்படி சமையலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வுப் பணிகள் ரத்து செய்யப்படுகின்றன,’ என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT