செங்கல்பட்டு மாவட்டம், ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (68). இவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.
அதில், தனது வீட்டருகே ரூ.10 கோடி மதிப்புள்ள காலிமனை உள்ளது. அதை சிலர் போலி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்துவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்டதாக ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த அய்யனார், வெங்கடாச்சலம்ஆகியோரை கைது செய்தனர்.