குமராட்சியில் இருந்து வல்லம்படுகை வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ள நிலையில், கீழக்கரை அருகே மதகு இணைப்பு பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. 
Regional01

குமராட்சி - வல்லம்படுகை கிராமச் சாலை சீரமைக்கப்படுமா? :

செய்திப்பிரிவு

குமராட்சியில் இருந்து வல்லம் படுகை வரை செல்லும் கிராமச் சாலை குண்டும் குழியுமாக போக் குவரத்திற்கு பயனற்ற நிலையில் இருக்கிறது. இச்சாலையை சீர மைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமராட்சியில் இருந்து வல்லம்படுகை வரை சுமார் 15 கி.மீ அளவுக்கு கிராமப்புறச் சாலை உள்ளது.இந்தச் சாலை குமராட்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலை யாகவும் உள்ளது. கீழக்கரை, நந்திமங்கலம், ஆலம்பாடி, அத்திப்பட்டு, வடக்குமாங்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சாலையில், சுமார் 10க்கும் மேற்பட்ட மிகச்சிறிய பாலங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது.

அப்படி கட்டப்பட்ட பாலங்கள் சாலையோடு சரியான முறையில் இணைக்கப்படவில்லை. இதற்கிடையே மழையால் சாலை மேலும் பழுதாகி, பெரிய குழிகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு பயனற்ற முறையில் உள்ளது. இருசக்கர வாகனத்தில் இச்சாலையில் செல்வோர் இந்த குழிகளில் விழுந்து, விபத்துகளை எதிர்கொள்கின்றனர்.

நெடுஞ்சாலைதுறையின் கிராம சாலைகள் பிரிவு அதிகாரிகள், இந்தச் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலை முழுவதும் சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT