Regional01

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு - முக்கிய சாட்சிகள் 10-ம் தேதி ஆஜராக உத்தரவு :

செய்திப்பிரிவு

விழுப்புரம் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வரும் சிறப்பு டிஜிபி தொடர்பான பாலியல் வழக்கின் முக்கிய சாட்சிகள் 3 பேர் வரும் 10-ம்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்த சிறப்பு சட்டஒழுங்கு டிஜிபி, பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கொடுத்தப் புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கின் விசாரணை நேற்று நடுவர் கோபிநாத் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழக்கின் சாட்சிகளான 1,2 மற்றும் 7 ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகததால், அதிருப்தியடைந்த நடுவர் 3 சாட்சிகளும் எதிர்வரும் 10-ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனக் கூறி வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.

SCROLL FOR NEXT